புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக முதலமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
வரும் காலங்களில் குப்பைகள் எங்கு சேகரிப்படுகிறதோ, அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கூடிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25 கோடி ரூபாய் மதிப்பில் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெர்னிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறிய அமைச்சர் மெய்யநாதன், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் ஆகியவைகள் கொண்டுவருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக தெரிவித்தார்.