சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி

242

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பழனி என்ற பூசாரி, சிறுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் வயிற்றுவலி குணமாகும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுமியை பூஜை செய்வதாக அழைத்துச் சென்ற பூசாரி பழனி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதனிடையே சிறுமி கர்ப்பிணியாகி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், பூசாரி பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.