உழவர் சந்தையில் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம்

258

புதுச்சேரியில் வேளாண் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளின் வாகனத்தில் இருந்து காய்கறிகளை இறக்காமல் தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சென்று விவரங்களை கேட்டறிந்தனர்.

இதனால் இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து உழவர்சந்தை தொழிளாலர்களின் பணி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தாங்கள் எடுத்து வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.