தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் அதிரடி முடிவு

354

காங்கிரஸ் கட்சிக்காக இனி பணி புரியப்போவதில்லை என தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 11 தேர்தல்களுக்கான உத்திகளை வகுத்துள்ளதாகவும், அதில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஒரு தோல்வியும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் தோல்விதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனி காங்கிரஸ் கட்சியுடன் பணி புரியப்போவதில்லை என்றும், தன்னுடைய சாதனைகளை அவை குலைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, 2024ஆம் ஆண்டு மக்களவை தோ்தலுக்கான உத்திகள் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினர்.

ஆனால் பிரசாந்த் கிஷோர் முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.