ஓசூர் அருகே, சொத்து தகராறு காரணமாக தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்….

104
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடரமணப்பா என்பவர் பெங்களூரில் வசிக்கும் மகளின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில்,மகள் வழி பேத்தியான அணிலாவுக்கு தனது 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கடைசி மகன் சிவானந்தா வெங்கடரமணப்பாவை பெங்களூருவிலிருந்து  திப்பேப்பள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து 6 ஏக்கர் நிலத்தினை தனக்கு எழுதி வைக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

இதனை வெங்கடரமணப்பா, மறுத்தால் ஆத்திரமடைந்த சிவானந்தா அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவலின் பேரில் சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, கொலை செய்த மகன் சிவானந்தா கைது செய்தனர்.