போப் ஆண்டவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

240
modi
Advertisement

போப்பாண்டவரைப் பிரமதர் மோடி சந்திக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பிரதமர் மோடி இந்துத்துவாக் கொள்கையில் தீவிரம் காட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அவர், உலகக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்திக்க உள்ளதாகக் கசிந்துள்ள தகவல்கள் உலகையே உற்றுநோக்க வைத்துள்ளது.

வாட்டின் நகரில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகப் பரபரப்பாகக் கூறப்படுகிறது.

இத்தாலித் தலைநகரான ரோம் நகரில் அக்டோபர் 30, 31 ஆகிய நாட்களில் வளர்ந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி 20 நாடுகளின் 8 ஆவது மாநாடு நடக்கவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்குச் செல்லவிருக்கிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இத்தாலி செல்லவிருக்கும் மோடி, போப் ஆண்டவரை சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கான நேரத்தை வாட்டிகன் நிர்வாகம் ஒதுக்கியவுடன், அதற்கேற்றபடி இந்தியப் பிரதரின் இத்தாலிப் பயணத் திட்டம் அமையுமெனக் கூறப்படுகிறது.

மோடி முதன்முறையாகப் பிரதமர் ஆனதிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டுத் தலைவர்களை சந்தித்து அந்நாடுகளோடு நல்லுறவை மேம்படுத்தி வருகிறார்.

அதனால், உலக அரங்கில் இந்தியர்களின் மதிப்பும் இந்தியா மீதான பார்வையும் உயர்ந்து வருகிறது.

மோடியும் உலகத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து வருகிறார்.

அந்த வகையில் மோடி- போப் சந்திப்பு இந்தியா- இத்தாலிக்கிடையேயான உறவை மேம்படுத்துவற்கான சந்திப்பாக அமையுமெனக் கருதப்படுகிறது.

மோடி போப்பாண்டவரை சந்தித்தால், கிறிஸ்துவ நாடுகளின் நன்மதிப்பையும் கிறிஸ்துவர்களின் நன்மதிப்பையும் பெறக்கூடும். எனினும், மத்திய அரசு மோடி- போப்பாண்டவர் சந்திப்புப் பற்றி உறுதிப்படுத்தவில்லை.