பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி

276

2002 குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதலமைச்சர் மோடியை சிறப்பு விசாரணைக் குழு விடுவித்ததற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாகிரா ஜாப்ரி இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், குஜராத் கலவரத்தின் பின்னணியில் பெரிய சதித்திட்டம் இருப்பதாகவும், அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனுக்கள் மேல்முறையீட்டுக்கு தகுதி அற்றது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து.