இந்தியா – வங்கதேசம் இடையே மீண்டும் விமான சேவை..

plane
Advertisement

கொரோனா தொற்று 2வது அலை காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அடுத்தவாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்கதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதே போன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.