கேரள முதலமைச்சர் பதவி விலக கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

313

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், பினராயி விஜயன் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோல், நேற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், பினராயி விஜயன் நேற்று கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்றார்.

அப்போது, விமானத்திலிருந்த இருவர், பினராயி விஜயனை ராஜிநாமா செய்யக்கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விமானத்தில் முழக்கம் எழுப்பியது குறித்து விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறைக்கு சிபிஎம் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.