தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

513
Advertisement

தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியாரின் 143வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழக அரசு அறிவித்தபடி, பெரியாரின் பிறந்த நாள் இந்த ஆண்டு முதல் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முன்னதாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.