UNESCO அறிவித்த விருதை கடைநிலை ஊழியருக்கும் சமர்ப்பிப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும், மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான பகான் ஜெகதீஷ் சுதாகர் தெரிவித்துள்ளார்.

133
Advertisement

UNESCO-வின் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள பகான் ஜெகதீஷ் சுதாகரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெற உள்ளார். இந்நிலையில், சத்தியம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ராமநாதபுரம் மாவட்டம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் பாலித்தீன் பையை வாங்கி அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி மஞ்சப்பையை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும், அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வலையில் சிக்கினால், மீனவர்களே அதனை எடுத்து நடுக்கடலில்விடும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வளர்த்து வருவதாக தெரிவித்த அவர், UNESCO அறிவித்த விருதினை கடைநிலை ஊழியருக்கும், கடற்கரை சமுதாய மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.