“அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம்” – ப.சிதம்பரம்

272

அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளதாகவும், எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் இருப்பதால், அந்த திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.