மெட்ரோ பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு

288

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சில வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.

இன்னும் சில வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பெங்களூருவில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள தகவல் அறியும் உரிமை அதிகாரிகள், மெட்ரோ பணிகளுக்காக 9 ஆயிரத்து 154 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.