அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க அரசு முடக்கிவிட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

130
Advertisement

சேலம் மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக குற்றம் சாட்டினார். 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளைய அடித்துதான் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க அரசு முடக்கியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அ.தி.மு.க ஆட்சியின் தொடங்கப்பட்ட திட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக தெரிவித்தார்.