ஒன்று எதிர்க்கட்சிகள்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேஜர் தகவல்…

216
Advertisement

சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசினார்.

இது தேசிய அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து முக்கிய தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். யூனியன் பிரதேசம் மற்றும் இந்தியாவின் தலைநகர் என்பதால் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், பணி இடமாற்றம் உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய உள்துறையிடம் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றத்துக்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறியது.

நமது நாட்டுக்கு என்று ஜனநாயகம், நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளது. ஆனால் இதனை பாஜக பின்பற்றவில்லை. லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் அங்கு இந்த சட்டதிருத்தம் நிறைவேறிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 93 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் அங்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்” என்றார். சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளை சந்தித்து வருகிறார். அதன்படி தான் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்கின்றனரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.