“தமிழகத்தில் நீட் தேர்வை அகற்றுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறோம்”

205

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 250 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

349 மகளிருக்கு தையல் எந்திரங்களையும், முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, முதல்வர், உங்களில் ஒருவனாக மக்களுக்கு பணியாற்றுவதே எனது கடமை  என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.