நேஷனல் ஹெரால்டு வழக்கு – “பழிவாங்கும் நடவடிக்கை”

460

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் 6 முறை சோதனை நடந்துள்ளது என்றும் அங்கிருந்து என்ன எடுத்தார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அண்ணாமலை அரசியல் செய்வதற்காக புழுதிவாரி இறைக்கிறார் என்று திருநாவுக்கரசர் விமர்சித்தார்.