நரியை வசியப்படுத்திய இசை

583
Advertisement

இசையால் மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் வசப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இளைஞர் ஒருவர்..

இதுதொடர்பான ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மலை உச்சியில் ஓர் இளைஞர் நின்றுகொண்டு பாஞ்சோ இசைக்கருவியை வாசிக்கிறார். எங்கிருந்தோ அந்த இசையைக் கேட்ட நரி ஒன்று ஓடிவந்து அவரின்முன் நின்று ரசிக்கத் தொடங்குகிறது.

பாஞ்சோவின் இன்னிசையில் தன்னிலை மறந்து இளைஞரின்முன் உறைந்துபோய் நிற்கிறது நரி. இளைஞரும் பயப்படாமல் தொடர்ந்து பாஞ்சோவை வாசிக்கிறார்.

அமெரிக்காவின் கொலரோடா காடுகளில்தான் இந்த விந்தையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இசையால் நரியை வசப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தைக் கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/tv/CZ4zmUUpoiN/?utm_source=ig_web_copy_link