புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தின் நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார் விமர்சித்துள்ளார்…

183
Advertisement

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

ஆனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரும், அம்மாநில துணை நிலை ஆளுநரும், நேயாளிகளிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரி விவாகரத்தில் ரவிக்குமார் தலையிடுவதாக, ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் கூறியதற்கும் ரவிக்குமார் பதிலடி கொடுத்தார். 

நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களிடம் உண்டியல் காட்டி சிறப்பு விமானத்தில் அனுப்புவேன் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அதுவும் மக்களிடம் இருந்து பெறப்பட வேண்டுமா- நீங்கள் சேர்த்துவைத்ததில் இருந்து வாங்கினாலும் நான் அதில் இறங்கமாட்டேன். நான் பொதுமக்களுடன் மட்டுமே பறக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்தப்படவில்லை. நாராயணசாமி என்னை அனுப்ப கவலைப்பட வேண்டாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் வகை நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நான் வேலை செய்கிறேன். கொரோனா காலத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவமனைக்குச் செல்லத் துணியவில்லை.

நான் போய் வந்தேன். எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்படலாம். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் (எம்.பி.க்கள்) இங்கு என்ன வேலை என்று கேட்பதில்லை. ஜிப்மர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், மருந்துகள் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.