மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் வாட்டிவருகிறது. இதற்கிடையில் பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் காட்டுத் தீ ஏற்கனவே பரவி பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை சேதப்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பயணிகள் இரயில் ஒன்று தீ எரிந்து கொண்டிருக்கும் காட்டிற்குள் சென்றதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலின்படி, பயணிகளுக்கு முன்னதாக இது குறித்து எந்த அறிவிப்போ அல்லது எச்சரிக்கையா தரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.கிராமப்புறம் வழியாக செல்லும் அந்த இரயில் ஒரு கட்டத்தில் தீ எரிந்து கொண்டிருக்கும் காட்டு பாதையில் சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில்,காட்டு தீ பரவுவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதுபோன்ற ஒரு சூழலில் பயத்துடன் காணப்பட்ட பயணிகள் உள்ளே இருந்து காட்டு தீயை வீடியோ எடுத்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ,30 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஸ்பெயினைச் சுற்றி சுமார் 54,300 ஏக்கர் நிலத்தை பாதித்துள்ளது, குறைந்தது இரண்டு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.