கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க முடிவு

292

டெல்லியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் தற்போது, 519 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், நோயாளிகளுக்கு இலவச ஆரம்ப சுகாதார நல சேவைகள் வழங்கப்படுவதுடன், வெவ்வேறு வகையான 212 பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.

நாள்தோறும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க, டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.