பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

550
Advertisement

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைக்க நாடு முழுவதும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.