Advertisement

துபாயில் வசிப்பவர்கள் தங்கள் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பால்கனியில் செய்யக்கூடாதவை:


1.துணி காயப்போடுதல் கூடாது

2.சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது

3.பால்கனியில் இருந்து குப்பைகளை வீசக் கூடாது

4.பால்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வர கூடாது

5.பால்கனியில் பறவைகளுக்கு உணவளிக்க கூடாது

6.பால்கனியில் தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது

மேலும் தவறாக பயன்படுத்தினால் 500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.