அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக திமுக சார்பாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சார்பாகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.d
17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக திமுக சார்பாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சார்பாகவும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை. அவரை சட்டப்படி கைது செய்து இருக்கிறீர்களா? கைது செய்யப்பட்டது முறையாக நடந்ததா? செந்தில் பாலாஜி கைதை ஏன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லைனு. அவர் கைது செய்யப்பட்டார் என்றால் உடனடியாக உடல்நிலையை காரணம் காட்டி பெயில் வழங்க வேண்டும் என்று திமுக சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், சக்திவேல் ஆகியோர் அமர்வு முன் முதல் வழக்காக இன்று விசாரிக்கின்றனர். அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி பிடித்து வைக்கப்பட்டு உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.