நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

282

கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ், 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்ச ரூபாய் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இடமாற்றம் செய்யப்படும் மதுபான கடைகளை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்தார்.