மேகதாது அணையை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்…

126
Advertisement

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 30 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை பார்த்து வருவதாக கூறிய அவர், மேகதாது மட்டுமே காவிரி பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். காவிரியில் மேகதாது அணை கட்டுவதால், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமாருக்கு  வேண்டுமானால் பயன் இருக்கும் என்றும்,

ஆனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என்று கூறினார். எனவே இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.