ராஜஸ்தானில் மிக் ரக போர் விமானம் விபத்து – விமானிகள் இருவர் உயிரிழப்பு

215

ராஜஸ்தானில் மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. நேற்றிரவு 9 மணி அளவில் இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதால் விமானம் முழுதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விமான விபத்து குறித்து விமானப்படை தளபதியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். மேலும் விபத்தில் இறந்த விமானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.