உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் ரஷ்யாவில் தன் முழு செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடை விதித்துள்ள காரணத்தினால் மைக்ரோசாப்ட் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்த பல முன்னணி நிறுவனங்கள் ,உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பின் அந்நாட்டை விட்டு வெளியேறியது.இந்நிலையில், பல ஆண்டுகளாக அந்நாட்டில் செயல்பட்டுவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.