பாராட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

291

மருத்துவ மேற்படிப்புக்கான நடப்பு ஆண்டு முதுகலை நீட் தேர்வு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 பேர் எழுதினர்.

இந்நிலையில், முதுகலை நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

தேர்வு முடிந்த 10 நாட்களே ஆன நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள மன்சுக் மண்டவியா, 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு, தேசிய தேர்வு வாரியத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.