மணிப்பூரில் பாஜக வெற்றிமுகம் , முதல்வர் வேட்பாளர் பைரன் சிங் முன்னிலை

215
Advertisement

60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது . காங்கிரஸ் 12, என்பிபி 10, ஐக்கிய ஜனதா தளம் 6, பிற கட்சிகள் 9 என்ற நிலையில் தற்போதய முன்னிலை நிலவரம் இருக்கிறது. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் பாஜக 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை நெருக்கடி ஏற்பட்டாலும் சுயேட்சை MLAகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங், ஹெய்ன்கேங் தொகுதியில் 11,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறார் .