வடிவேலு பாணியில் ” 60 மணி நேரம் சும்மா ” இருந்தவருக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி .. !

101
Advertisement

வடிவேலு அவர்கள் ஒரு படத்தில் தன்னை சீன்றியவரை ” ஒரு மணி நேரம் சுமா இருந்தா… வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலைசெய்றேனு”  சவால் விடுவார்.இதில் அந்த நபர் முழுமையாக பந்தைய நேரத்தை கடப்பதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்துவிடுவார்.இறுதில் தோறும் போவார்.

ஒரு மணி நேரத்திற்க்கே அப்படி என்றால், இங்கு ஒருவர் “60 மணி  நேரம் சும்மா” இருந்து போட்டில் வெற்றிபெற்று பரிசுகளை தட்டிச்சென்றார் . தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மாண்டினீக்ரோவில் ( Montenegro)  உள்ள பிரெஸ்னா ( Brezna) கிராமத்தில் தான் இந்த போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது,

Advertisement

 “லையிங் டவுன் சாம்பியன்ஷிப்பின்” ( “Lying Down Championship”) 12வது ஆண்டு போட்டி சமீபத்தில் நடைபெற்றது.இதில்  பங்கேற்பவர்கள் முடிந்தவரை அதிகநேரம் சும்மாவே இருக்கனும் .இந்த ஆண்டு போட்டியில் இறுதிவரை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தொடர்ந்து நீடித்த நிலையில், 60 மணி நேரம் சும்மாவே படுத்திருந்து ” பெஜனோவிக்”  என்ற அந்த ஆண்  போட்டியாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.

இறுதியில் இரு போட்டியாளருக்கும் பரிசு தொகை , சொகுசு ஹோட்டலில் விருந்து , சுற்றா பயணம் என பல பரிசுகள் வழங்கப்பட்டது.