ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் பன்னவரோட நிலைமைய பாருங்க!

49
Advertisement

அவசர கதியில் சுழன்று கொண்டிருக்கும் பலருக்கும், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது அன்றாட வாழ்க்கையின் முக்கிய பங்காகவே மாறிவிட்டது.

நாம் ஒன்று நினைத்து ஆர்டர் செய்தால், டெலிவெரியின் போது surprise ஆக வேறு ஒரு பொருள் வருவதெல்லாம் சகஜமாக நடக்கவே செய்கிறது.

அண்மையில், டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் சமூகவலைத்தளங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உபைடு என்ற நபர், ஆன்லைனில் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்து சேர்ந்ததோ வட்ட வடிவில் வெட்டப்பட்ட பச்சை வெங்காய  ரிங்ஸ்.

அதிருப்தி அளிக்கும் இந்நிகழ்வை நகைச்சுவையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார் உபைடு.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதே போலான தங்கள் அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர்.