இப்படியும் ஒரு சாதனையா?

38
Advertisement

ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்கோ ஒரு நபர், ஏதோ ஒரு சாதனையை படைத்து கொண்டு தான் இருப்பார் என கூறும் அளவுக்கு, தினமும் புதிய சாதனைகளை பற்றிய செய்திகள் வலம் வருகிறது.

அதிலும், சுவாரஸ்யமான மற்றும் விநோதமான சாதனைகள் இணையத்தை ஆக்கிரமிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

அமெரிக்காவில், கொலராடோ பகுதியை சேர்ந்த பாப் (Bob) என்ற நபர், ஒரு வேர்க்கடலையை வாயில் கட்டப்பட்டுள்ள  ஸ்பூனின் உதவியுடன் பைக்ஸ் பீக் (Pikes Peak) என்ற மலையின் மீது ஏற்றி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

பைக்ஸ் பீக் பற்றிய வரலாற்று மற்றும் கலாச்சார பெருமையை உலகுக்கு காட்டவே, ஏழு நாட்கள் செலவழித்து இந்த சாதனையை செய்ததாக கூறும் பாபின், கடலை உருட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.