இனி வீடு கட்ட செங்கல் தேவை இல்லை பீர் பாட்டிலே போதும்…

457
glass
Advertisement

பீர் பாட்டிலில் வீடா..? கேட்கவே வித்தியாசமாக இருக்கே… ஆமாங்க, கேரள மாநிலம் கண்ணூர்ல தான் இந்த பீர் பாட்டில் வீட்டை கட்டிருக்காங்க.

கேரளாவுல துணிக்கடை வச்சுருக்க 31 வயசான அஜி, அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த பீர் பாட்டில் வீடை கட்டிருக்காங்க.

இந்த LOCKDOWN காலத்துல வீட்டுல சும்மா உட்க்கார முடியாம யோசித்ததுல வந்த சிறப்பான ஐடியா (IDEA ) தான் இந்த பீர் பாட்டில் வீடுன்னு சொல்லுறாரு அஜி. அஜிக்கும் அவரது மனைவி லீலாவுக்கும் தான் இந்த சிறப்பான ஐடியா தோன்றியிருக்கு.

இவர்களுக்கு ரொம்ப நாளாவே குறைந்த செலவுல சுற்றுசுழலுக்கு உகந்தமாறி ஒரு சொந்த வீடு கடனுனு ஆசையாம். அஜியோட மாமனார் குடுத்த ஒரு இடத்துல குறைவான செலவுல வீடு கட்னனு முடிவு பன்னிருக்காங்க.

சிவில் எஞ்சினீரிங் இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும் அஜியோட உறவுக்கார நண்பர் உதவியோட குறைந்த செலுவுல 1000 சதுரஅடில ஒரு வீடு காட்ட பக்கவா பிளான் பன்னிருக்காங்க.

வீடு கட்ட பீர் பாட்டில், மூங்கில், களிமண் மற்றும் எர்த் பேக் முறையை பயன்படுத்தலானு முடிவு பன்னிருக்காரு அஜி .

முதல் LOCKDOWN முடிஞ்சு ஜனவரில தளர்வுகள் அறிவித்தவுடனே வீடு கட்ட தேவையான மூங்கில், பீர் பாட்டில், செங்கலுக்கு பதிலா மண்ணை பயன்படுத்த மறுசுழற்சி பிளாஸ்டிக் கவர்ன்னு எல்லாத்தையும் வாங்கிட்டாரு.

மறுசுழற்சி பிளாஸ்டிக் பேப்பர்ல மண்ணை நிரப்பி, 1000 அடி அகலத்தில் தோண்டுன குழில போட்டு அடித்தளம் போட்டுருக்காங்க.

2500 பீர் பாட்டில் மற்றும் மூங்கில் கம்புகளை வச்சு வீட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டிருக்காரு, குழி தோண்டுனதுல கிடைச்ச களிமண்ணை வச்சு சுற்று சுவரை பூசியிருக்காரு.

வீட்டோட மேற்கூரைக்கு உபபோயகம் இல்லாத வீடுகளில் இருந்த மண் ஓடுகளை பயன்படுத்திருக்காரு.

வீட்டை கட்டுறதுக்கு மட்டும் 5.5 லட்சம் செலவு பன்னிருக்காரு அதுபோக TOILET, எலக்ட்ரிக் போன்ற இதர தேவைகளுக்கு 50000 செலவு பன்னிருக்காரு.

வெறும் 6 லட்சத்தை வச்சு ஆறே மாசத்துல, ஒரு லிவிங் ரூம், ரெண்டு பெட் ரூம், ஒரு பாத்ரூம், ஒரு கிச்சன் சேர்த்து அவரோட சொந்த வீடு கடனுனு இருந்த கனவையும் நிறைவேத்திட்டாரு.

முழுக்க முழுக்க அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வச்சு தான் இந்த வீட கட்டிருக்காரு. ஒரு சில கஷ்டமான கட்டுமான பணிகளுக்கு மட்டும் கட்டுமான பணியாளர்களை அழைத்து வீட்டை கட்டிருக்காரு.

இவரோட பீர் பாட்டில் வீடுதான் இப்போ ஆன்லைன்ல டிரண்டிங்