“ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது பா.ஜ.க. ஆட்சி”

27

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிட்லர், முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க.வின் ஆட்சி மோசமானது என்றும் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.

Advertisement

விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும்  எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.