பாஜகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் டாக்டர் மைத்ரேயன். பாஜகவில் இருந்து 1999-ல் விலகிய அவர், தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். அதிமுகவில் எம்.பி உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகிய அவர், மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை இழந்த பின்னர் தர்ம யுத்தம் நடத்தியபோது, அவருக்கு பக்கபலமாக இருந்தவர் மைத்ரேயன்.
ஆனால், ஐபிஎஸ் – ஓபிஎஸ் என அதிமுக பிளவுபட்டதை அடுத்து, அவர் ஐபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டார்.
இந்த நிலையில், அதிமுகவில் நிலவும் அரசியல் மோதலுக்கு இடையே, அவர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். அண்மையில், பாஜக ஐ.டி. விங்கை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்.பி பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது
.ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஐபிஎஸ் தலைமையிலான மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார், மாநாடு அவரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார். அதிமுகவில் இருந்த மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எங்கிருந்தாலும் வாழ்க என பதிலளித்து விட்டு ஓபிஎஸ் சென்றார்.