ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
அதனை 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
75 கிலோ மீட்டர் தொலைவிற்கு அகல ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடக்கி வைத்ததை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையிலிருந்து தேனிக்கு ரயில் சேவை தொடங்கியது.
முதல் ரயில் உசிலம்பட்டி வந்தபோது, ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.