“ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது”

457

கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.

நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்த மனுக்கள் செய்திருந்தனர்.

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தமிழ்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.