லக்கிம்பூர் வன்முறை – உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு

231
supreme court
Advertisement

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

லக்கிம்பூரில் நடந்த விஷயம் துரதிருஷ்டவசமானது என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு பதில் அளித்துள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுளளது; நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக உ.பி. அரசு கூறியுள்ளது.

லக்கிம்பூர் விஷயத்தை முறையாக கையாளவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மெலும், வன்முறையில் காயமடைந்தவர்கள், உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.