கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை அணையிலிருத்து திறக்கப்படும் நீரில் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
இதனால் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ் பகுதியிலுள்ள ஆற்றில் பாறைகளின் மீது ஏறி ஆபத்தான முறையில், குளித்தனர்.
இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமுள்ளதால், அந்த பகுதியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.