அச்சத்தில் வாகன ஓட்டிகள்

348

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கலில் இருந்து பரந்தூர் பகுதி வரை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பரந்தூர் பகுதியில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை முறையாக அகற்றாமல் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக சாலையை அமைத்து வருகின்றனர்.

இதனால் வாகனத்தில் செல்வோர் சாலை நடுவே உள்ள மின்கம்பம் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சாலை நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி விபத்தை தவிர்க்கும் வகையில் சாலை அமைத்து தரக் கோரிக்கை விடுத்தனர்.