கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

394
  1. டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை, கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைகிறது.

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

வாய்க்கால்கள், வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளதால் கடைமடை வரை தண்ணீர் பாய்ந்து, விளைச்சல் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதகுகள் சீரமைக்கப்பட்டு, பாசன ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.