கல்குவாரியில் நிலச்சரிவு

368

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவபாளையத்தில், கல்குவாரி அமைந்துள்ளது.

மலையின் மீது அமைந்துள்ள இந்த கல்குவாரியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையில் இருந்து கற்கள் மற்றும் மணல் சரிந்து விழுந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

நிலச்சரிவின் போது, குவாரியில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே கல்குவாரி நிலச்சரிவு தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.