Advertisement

நீலகிரி மாவட்டம் உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சல்லிவன் நினைவாக, உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவனுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஜான் சல்லிவன் உதகையை சிறந்த உறைவிடமாக உயர்த்தி 200ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்குகிறது.

உதகை 200 ஆவது ஆண்டை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதகையை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஜான் சல்லிவன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜிவ்காந்தியின் திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி  மரியாதை செலுத்தினார்.