ஒன்றரை மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்களை தொலைத்த ஊழியர் !

242
Advertisement

மது அருந்துவது பொதுவாக இருக்கும் ஒரு பழக்கம்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் வாரஇறுதி நாட்களில் தங்கள் நண்பர்கர்களுடன்  மது அருந்துவது,நேரத்தை செலவிடுவது என இருப்பார்கள்.

இந்நிலையில்,இந்த பழக்கத்தால்  ஜப்பானில் ஒன்றரை மில்லியன் பேரின் தனிப்பட்ட  விவரங்கள்  அடங்கிய  பென்டிரைவ் ஒன்றை அதிகாரி ஒருவர் தொலைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

வரி விலக்கு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 40 வயதான அந்த நபர், ஒசாகாவின் வடமேற்கில் உள்ள அமகாசாகி நகரில் பணிநேரம் முடிந்தபின், உள்ளூர் உணவகத்தில் பல மணிநேரம் செலவிட்டு மது அறிந்துள்ளார்.

பலமணி  நேரத்திற்கு பின் ,அங்கிருந்து சென்றுள்ளார் அந்த நபர். ஒருகட்டத்தில் எதார்த்தமாக கவனித்ததில்  அவரின் பை காணவில்லை.பையுடன் ஒன்றரை மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய பென்ட்ரைவும் காணவில்லை.மது பழக்கம் எந்த அளவு ஆபத்து என்பதை  இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.