சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

399
Advertisement

ஸ்ரீநகரில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் கூனிநாலா என்ற பகுதியில் புதிததாக  சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழை காரணமாக, அந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளை அகற்றி எஞ்சியவர்களை மீட்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.