ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

187

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி  வந்தார்.

இந்நிலையில், அவர் வழக்கம் போல் வங்கிக்கு சென்று பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினம் சிகிச்சை பலனின்றி விஜய் குமார் உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த ஆசிரியை சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் அச்சம் அடங்குவதற்குள் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.