எலான் மஸ்க்கால் ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரேநாளில் பணிநீக்கம் செய்தார். இந்நிலையில், ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து, ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பணியை இழந்த பலர் தன் மீது கோபமாக இருப்பதை தான் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் இந்த நிலைக்கு, ஆளானதற்கு தான் தான் பொறுப்பு என்றும் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆண்டு மே மாதம் அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.