டீ, காஃபி, ஐஸ் வாட்டரை கொண்டு மாத்திரை போட்டால் உடலுக்கு ஆபத்து..!

180
Advertisement

பொதுவாக நம்மில் பலர் காலையில் காஃபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை, ஆனால் எல்லா சமயத்திலும் காஃபி அல்லது டீ குடிப்பது சரியா ?

குறிப்பாக காஃபி குடித்து விட்டு மாத்திரையைப் போடலாமா? குளிர்ந்த நீருடன் மாத்திரை போடலாமா என்ற பல கேள்விகள் இருக்கிறது.
தலைவலி மாத்திரை சாப்பிடும் போது அதனைக் காப்பியில் கலந்துக் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது, ஆனால் இது தவறான முறை காப்பியில் உள்ள கஃபைன் (caffine) மாத்திரையின் சக்தியை குறைக்கக் கூடியது, எனவே இந்த பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.


அதுபோல கஃபைன் (caffine ) நரம்பு மண்டலத்தைத் தூண்டக் கூடியது, மயக்கம் அல்லது உடலைச் சாந்தப்படுத்தும் மருந்துகளை காஃபியோடு போடும் போது தீங்கு விளைவிக்கக் கூடும் , ஏனென்றால் இரண்டும் எதிர்விளைவுகள் கொண்டுள்ளது.
குளிர்ந்த நீரோடு மாத்திரை போடும்போது அந்த மாத்திரை சீக்கிரமாக செயல்படாது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்,
உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிப்பதால், உணவில் உள்ள கொழுப்புகள் கரைவதற்குச் சீக்கல் ஏற்பட்டு அது அப்படியே தேங்கி விடும் அதேபோல ஐஸ் வாட்டரில் மாத்திரை சாப்பிடும் போது மாத்திரையின் வேலை தாமதமாகும்.


எனவே குளிர்ந்த நீரில் மாத்திரை போடக்கூடாது, வாய் நிறையத் தண்ணீர் ஊற்றி அதில் மாத்திரை போடுவதுதான் சரியான முறை, 250 மில்லி தண்ணீர்ரோடு மாத்திரை போட்டால் உணவுக்குழாயில் தடையின்றி நேராக செல்லும்.
டீ, காஃபி போல் பாலுடன் மாத்திரை குடிப்பதும் தவறுதான், அப்படிச் செய்வதால் பாலில் இருக்கும் புரதம் மற்றும் கால்சியம் மாத்திரைகளில்
இருக்கும் வீரியத்தை குறைத்து அதன் வேலையைச் செய்ய விடாமல் தடுக்கும்.