இந்தியாவுக்கு இடம்பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

264
Advertisement

உக்ரைன் போரால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்மீது அதிரடியாகத் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவால், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் புகலிடம்தேடி அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவுக்கு இடம்பெயத் தொடங்கியுள்ளன.

இந்தியர்களின் சரளமான ஆங்கிலப் புலமை, சலிப்படையாமல் தொடர்ந்து பணிபுரியும் திறன், கடின உழைப்பு, புத்திசாலித்தனம் போன்றவற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வழங்கிவருகின்றன.

பல ஐடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே உள்ளனர் என்பதே இதற்கு சாட்சி. அதேசமயம், உக்ரைன், ரஷ்யாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்த 1 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்தச்சூழலில் மேலும் பல நிறுவனங்களின் வருகை இங்குள்ள இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அள்ளித்தரத் தொடங்கியுள்ளன.